காப்பு (COP) வெச்ச ஆப்பு (நிறைவுப் பகுதி)

இதுவரையில்…

குஜால்டியா காரு ஒட்டிகிட்டிருந்த என்ன ஒரு போலிஸ் காரு கவனிக்க..

பின்னாடியே தொரத்தி அந்த காப்பு காரு வர..

கடத்தல் மன்னன புடிக்க வர மாதிரி சைரன் அடிச்சி என்ன புடிக்க..

இது தெரியாத நானும் திரு திருன்னு முழிக்க..

காக்க காக்க கனகவேல் காக்க..அப்பா ஞானப்பண்டிதா…!

இனி..

ஆகா..

மனசுல மிக்கேல் சாக்சன் மச்சான்னு நெனப்புல ஓவரா சவுண்ட குடுதுட்டோமோ.! அதுக்குதான் நிறுத்த சொல்றானுங்களா.? அட பாட்டு சத்தமா கேட்டது குத்தமாடா? இல்ல பாட்டு வேகத்துல வண்டிய ஒட்டிடேனா?ஆமா என் கார யானகாலனே வந்து ஆக்சிலரேட்டற அமுக்கனாலும்  அறுவது மயிலுக்கு மேல போகாதே. இதுல ஓவர் ஸ்பீடு வேறயா..! அப்ப எதுக்குதான் நிறுத்த சொல்றானுங்க?

சரி ஊரு விட்டு ஊரு வந்திருக்கோம் பாத்து சூதானமா நடந்துக்கோன்னு எங்க ஆயா அப்பவே சொல்லிச்சி. எதுக்கு வம்புன்னு நிறுத்திட்டேன்..இங்க தான் நம்ம ஊரு போலீசுக்கும் இந்த ஊரு போலீசுக்கும் வித்தியாசம் பாருங்க. நம்ம ஊர்ல மடக்கினதும் போலீஸ்காரர் மொதல்ல என்ன பண்ணுவாரு..ரியாக்-ஷன் எதுவும் குடுக்காம வண்டிய நிறுத்த சொன்னவரு, நீங்க கிட்ட வந்ததும் ஜெட் லீ மாதிரி பாஞ்சி வந்து உங்க வண்டி சாவிய புடிங்கிப்பாரு..நீங்க தப்பிக்க கூடாதில்ல..என்ன ஒரு வில்லத்தனம்..! அதுக்கப்பறம் நீங்க கெஞ்ச அவரு மிஞ்ச, நீங்க ஐஜி-ய தெரியும்னு சொல்ல, இப்ப அவரு கெஞ்ச, நீங்க மிஞ்ச தப்பிச்சி வரதுக்குள்ள நமக்கு தாவு கிழிஞ்சிடும்.

ஆனா இங்க அப்படியே உல்டா. ரோடெல்லாம் பெரும்பாலும் காரு தான். அதான் போலீஸ் நம்மள புடிக்கனும்னா கூட சில பல செட்டிங் பண்ணி புடிக்க வேண்டிஇருக்கு. மொதல்ல ஊர அலற உடற மாதிரி ஒரு சங்கு ஊத்திகிட்டே போவாங்க. நம்ம ஊர்ல அவசரமா அம்புலன்ஸ் அலாரம் அடிச்சா கூட நாம ஒதுங்க மாட்டோம் (என்னையும் சேத்துத் தான்) இங்க அந்த சவுண்ட கேட்டா போதும், நம்ம திருவிளையாடல் படத்துல சிவாஜி சார் பாடுறத நிறுத்தினதும் அகிலமும் நின்னு போகுமே, அது மாதிரி எல்லா வண்டிகளும் அங்க அங்கேயே ஹால்ட் ஆயிடும். ஆம்புலன்சோ போலிஸ் வண்டியோ கொஞ்ச தூரம் போனதும் தான் எல்லா வண்டியும் அசையும். இது பத்தாதுன்னு கலர் கலரா தோரணம் கட்டின மாதிரி வெளக்கு வேற. அதுவும் காப் வண்டினா எக்ஸ்ட்ராவா ஒரு நாலு “பெட்டெர்மேக்ஸ்” லைட்டு வேற. நம்ம கவுண்டர் கட பெட்டெர்மேக்ஸ் மாதிரி இல்லாம இது ரொம்ப பளிச்சின்னு இருக்கும். சேந்தாப்புல ரெண்டு செகண்டு பாத்தா கண்ணு அவிஞ்சி போய்டும்..!

இவ்ளோ பந்தா பண்ணி என்ன புடிச்சா எப்பிடி இருக்கும் பாருங்க. நிக்க சொன்னதும் எறங்கி வெளிய வந்தா இன்னும் பெரிய பிரச்சனை ஆகிடும். அவங்களா வந்து பாகர வரைக்கும் நாம அட காக்கற கோழி மாதிரி ஒக்காந்திருக்கணும். என் ரெண்டு பக்க ஜன்னல்யும் ஒவ்வொரு போலீஸ் வந்து நின்னாங்க. ஆத்தி அந்த போலிஸ் காரரு கைல எவ்ளோ பெரிய டார்ச்சி லைட்டு. அந்த பெட்டேர்மேக்ஸ் பத்தாதுன்னு இவருவேற கண்ணுலேயே அடிச்சி பாத்தாரு. எனக்கு நல்ல நாள்லயே முழி திருட்டி முழயா இருக்கும், இவரு வேற வெறிக்க வெளக்கு அடிச்சா, பேய் முழி முழிச்சேன் நான்.

செய்கையாலே கண்ணாடிய இறக்க சொன்னாரு போல. எனக்கு புரில. அவரு அழுத்தமா கய்ய ஆட்டி “DOWN” அப்டின்னாரு. ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கண்ணாடிய எறக்கிட்டேன். இதுவரைக்கும் வில்லன் மாதிரி பாத்துகிட்டு இருந்தவரு, “hello my friend how’re doing??” அப்டின்னாரு. நீங்கல்லாம் இப்டித்தான் ஆரம்பிப்பீங்க, அப்பால தான் ஆப்பு வெப்பீங்க.

“குட்டு ஆபிசெர், அவ் பஉட் யு”

” Good, Can i see your license.”

அது இல்லாமையா..இந்தாங்க. “Do you still live in this address?” ஆகா கரக்க்டா புடிச்சிட்டான். நான் அந்த லைசென்ஸ் எடுத்ததுகப்பரம்  நாலு வீடு மாறிட்டேன்.

“நோ ஆபிசெர்” “ஐ ஆம் லிவிங் டிபெரன்ட் அட்ரஸ்” “don’t you know you should update your address?” எதுக்கும் இருக்கட்டும்னு ஒரு அம்மாஞ்சி சிரிப்பு சிரிச்சி வெச்சேன். ஒர்க் அவுட் ஆகல. “Can i see your insurance?” அது எங்கிட்டு இருக்கோ..இருங்க சார் பீராஞ்சி பாத்து சொல்றேன். டாஷ் போர்ட்குள்ள தலைய உட்டு எடுத்து குடுத்தேன். அதுல என்ன குத்தம்டா சாமி?? “Can i see your registration?” இது வேறயா..இந்தாங்க..

“Ok..Do you know why we pulled you over?” அய்யா அது தெரியாம தானே குத்த வெச்சி ஒக்காந்திருக்கேன். “நோ ஆபிசெர்” “you are driving with expired registration title” அப்பிடின்னு சொல்லி என் நம்பர் ப்ளேட்ட காட்டினாரு.

அட ஆபிசர்களா..இதுக்காடா என்ன இருவது குலோமீட்டரு தொரத்தி வந்தீங்க. மறுபடியும் ஒரு அம்மாஞ்சி சிரிப்பு. இந்த முறை என்ன நெனச்சாரோ தெரில. “wait here” ன்னு சொல்லிட்டு அவரு வண்டிக்குள்ள போய்ட்டாரு. ஒரு பத்து பதனஞ்சி நிமிஷம் கழிச்சி, கைல ஒரு நோட்டீஸ் போல எதையோ கொண்டு வந்தாரு.
“ok, i am gona give you a ticket, but you don’t have to pay anything, update your license and registration before April 27. Once you did that bring this to the sheriffs office and mark it off, Alrite?”
அய்யா தருமப்ப்ரபு, காசு வேணாமா? என்னையா காப்பு நீ..இதே எங்க ஊரா இருந்தா, எங்க மாமா வசூல் ராஜா ஆகிஇருப்பாரே. இப்படியே இருக்காதீய, அப்பறம் இளிச்ச வாயன்றுவய்ங்க..!

“ஓகே ஆப்பிசெர்”
“Good, sign here” “Drive safe alrite”
ஆகட்டும் சாக்சன் துரை அய்யா..உடு ஜூட்டு, ஐ ஆம் கிரேட் எஸ்கப்..!

Advertisement

3 Comments

Filed under தமிழ், பதிவு, Fun, Tamil

3 Responses to காப்பு (COP) வெச்ச ஆப்பு (நிறைவுப் பகுதி)

  1. blurb

    bada shoka keethuba

  2. Ha haa haaa Interesting.. அந்த காப் அவுக ஊரு விஜயகாந்துன்னு நினைக்கிறன்.. அம்புட்டு நேர்மை அப்பு.. ஏப்ரல் மாதத்தில் கார் பதிவு என்னை புதுப்பித்தீர்களா இல்லையா?

  3. Ravivarman

    By this time, you should be writing COPPU meendum vaitha AAPU….!!!! Marupadiyum innum mattaleya??

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s