திருப்பதி லட்டும் இண்டலெக்சுவல் ரைட்சும்..!

திருப்பதி தேவஸ்தானம், திருப்பதி லட்டுக்கு நுண்ணறி சொத்து உரிமம், intellectual property rights (இங்க்ளிஷ்லேயே புரிஞ்சிடிசிங்கிரீங்களா..!) அதாவது அவங்களுக்கு  மட்டுமே சொந்தமான ஒரு பொருளா அங்கீகரிக்க காப்புரிமை (patent) பதிவு செஞ்சிருகிறதா ஹிண்டு வில படிச்சேன். அத பத்தி இன்னும் விரிவா படிக்க, இந்த லிங்க்க கிளிக் பண்ணுங்க.

Chief Minister Y.S. Rajasekhara Reddy relishing Tirupati laddu prasadam

இதுல என்ன இருக்குன்னு கேகரீங்களா..?இனிமே முக்குக்கு முக்கு கடை வெச்சி திருப்பதி ஒரிஜினல் லட்டுன்னு யாரும் விக்க முடியாது. அவங்க மேல வக்கீல் நோட்டீஸ் விடலாம், கோர்ட்டுக்கு இழுக்கலாம். ஜெரிகண்டி..ஜெரிகண்டி..! செல்வாக்கும் சரக்கும் இருக்கறவங்க தப்பிச்சிக்கலாம்.!  அப்ப மத்தவங்க கதி என்னனு கேகரீங்களா? கோவிந்தா கோவிந்தா..!

திருப்பதி லட்டுக்கு அங்கீகாரம் குடுத்ததோட விட்டா சரி. லட்டுக்கும் யாரவது காப்புர்மை வாங்கிட்டா என்ன ஆகும்னு யோசிச்சி பாத்தேன்..அப்பறம் கல்யாண வீட்டுல லட்டு போட்டா போலீஸ் முட்டி மேல நாலு போட்டு உள்ள தள்ளும். படத்துலயோ சினிமாவுலயோ காட்டும் போது காப்பிரைட்ஸ் பெற்றதுன்னு போட்டு தான் காமிக்கணும். லட்டு டப்பாவுல “இதை வேறு யாரிடம் இருந்து வாங்கினாலோ அல்லது உரிமம் வாங்காமல் வீட்டில் மற்றும் பொது இடங்களில் விற்பனைக்கு உட்படுதினாலோ கடும் தண்டனைக்கு உட்பட நேரிடும்” அப்பிடின்னு போட்டிருக்கும்.

இதே வரிசையில வேற எதுக்கெல்லாம் காப்புரிமை வாங்கலாம்னு ஒரு சின்ன கற்பனை..

“டால்டா டப்பா ஹேண்ட் பேக்”
குறவர்களோட கண்டுபிடிப்புன்னா சும்மாவா.

“மதுரை ஸ்ரீ ஒரிஜினல் முனியாண்டி விலாஸ்”
இத ஆரம்பிச்ச புண்ணியவான் யாருன்னு தெரியல..ஆனா ஊருக்கு நாலு ஓட்டல் இந்த பேருல நடமாடுது. இதுக்கு மொதல்ல யாரவது வாங்குங்கப்பா.

“பழனி பஞ்சாமிர்தம்”
திருப்பதி லட்டுக்கு நாங்க ஒண்ணும் சளச்சவங்க இல்லையே. போடுங்க இது பேருலயும் ஒரு பேடண்டு.

“அய்யங்கார் பேக்கரி”
அய்யங்கார்னு தான் பேரு, ஆனா ஜாதி மதம் பாக்காம எந்த ஊர்லயும் இருக்குறாரு இந்த போக்கிரி. சாரி பேக்கரி.

“குஷ்பு இட்டிலி”
குஷ்பு முந்திகிறதுக்கு முன்னாடி முந்திகிட்டா நீங்க ஸ்மார்ட்.

“வேலு மிலிட்டரி ஓட்டல்” , “சிட்டு குருவி லேக்கியம்” “கந்த விலாஸ் விபூதி” “எச்ச/ஜவ்வு மிட்டாய்” இப்டி பல அய்ட்டங்களுக்கு  நம்ம ஊர்ல பேடண்டு வாங்கலாம்..!

வியாபார ரீதியா பாத்தா இது ஒரு நல்ல தொடக்கம். சோசியலிச அடிப்படையில பாத்தா  பேடண்டு எல்லாம் பெரிய குத்தமா தெரியும்.ஆனா ஒருத்தர் கஷ்டப்பட்டு உருவாக்கின ஒரு ஐடியாவ வெச்சி மத்தவங்க எல்லாம் சொகமா சம்பாரிக்கறது தப்பு தானே. இந்த உதாரணம் திருப்தி லட்டுக்கு பொருந்துமோ என்னவோ ஆனா வேற பல விஷயங்களுக்கு பொருந்தும்.

நீங்க வேற எதுக்கெல்லாம் பேடண்டு குடுக்கலாம்னு நெனைக்கறீங்க??

Advertisement

3 Comments

Filed under தமிழ், Fun, Tamil

3 Responses to திருப்பதி லட்டும் இண்டலெக்சுவல் ரைட்சும்..!

  1. watch this video… this is going to be patented by Americans “enna kodumai”

  2. ganesh

    options ellame negative aa iruke…pudichi irukunu solla oru option poda kudathaa…?

  3. yokesh

    ippo maathitten. Thanks for pointing it out ganesh.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s