மாம்ஸ், மங்கினி, திம்ஸ் மற்றும் பலர்…

வணக்கமுங்க..ரொம்ப நாளா ஒடப்புல போட்டு, என் மனசுக்குள்ளயே பூட்டி வெச்சிருந்த கதைங்க. பெரிய தங்கர் பச்சன் சொல்ல மறந்த கதையான்னு கேக்கறது தெரியிது. மெர்சலாவாம மேட்டர படிங்க..பாகம் ஒண்ணு இங்க இருக்கு, இன்னொன்னு ஆன் லயின்ல அடி விழாம இருந்தா மறுபடியும் எழுதறேன்…

“நானும் பாத்துகினே தான் டா வரேன்..எம்மான் நாளா தான் நானும் நல்ல புள்ள மாறியே டபாய்கிறது. அதான் இன்னிக்கி ரெண்டல ஒண்ணு டீல் பண்றதுன்னு முடிவு பண்டேன் டா. நமக்கும் பீலிங்க்ஸ் இருக்கு இல்ல. தே..ஊத்து டா அத்த.”

மாம்ஸ் என வழங்கப்படும் லோகநாதன், முதலாம் ஆண்டு மெக்கானிக்கல்.  பேர் காரணம் இல்லனாலும் எல்லாரும் இவன மாமான்னு கூபிட்றது வழக்கம். சென்னையிலிருந்து வந்த நம்ம மாம்ஸ் வாய திறந்தா அதுல நாலு வார்த்தைக்கு ஒரு வார்த்தை நல்ல வார்த்த இருக்கும். உங்க வசதிக்கும் அனுபவத்துக்கும் ஏத்த மாதிரி நீங்க நெரப்பிக்கலாம்.

மாம்ஸ் கூட்டாளிங்க மூணு பேர். முதலாவது திம்சு என வழங்கப்படும் சதீசு முதலாம் ஆண்டு எலக்டிரிகல்.

“பங்கு, சொல்றனேன்னு தப்பா நெனைக்காத, அந்த புள்ள என்னமோ ஒரு சைசா தான் திரியிது..நேத்து கூட கேண்டீன்ல அந்த சப்பாத்தி தலயனோட பாத்தேன். என்னமா வறுத்து எடுதுகிட்டிருந்தான் தெரியுமா?”

“ஓ#%&, சும்மாவா வந்த, அவன அங்-யே போட்டு மெர்சிருக்க வானா.?”

” நான் சும்மா வந்திருப்பேன்னு நெனைகிரியா நிய்யி?? அவன செய்ய எவ்ளோ நேரம்டா ஆகும்..இப்ப சொல்லு பங்காளி..அவன வகுந்துடறன். நம்ம பிசிக்ஸ் வாத்தியாரு அங்கிட்டு பழியாக் கெடந்து உசுர வாங்கிப்டான். அதான் அப்பறம் செஞ்சிகலாம்னு வந்துட்டேன்.”

மாம்ஸ் மாதிரி இல்லாம பொருத்தமான அடைமொழி. ஆளு ஆறு அடில அம்ஜத் கான் மாதிரி இருப்பான். ஆனா சரக்கடிச்சா மொதல் “ஆப் பாயில்” போடுறது இவனா தான் இருக்கும். “மட்ட சரக்க ஊத்திப்டாய்ங்க பங்கு” ம்பான் மறுநாள்.

அடுத்து மங்கினி மௌலி  முதலாம் ஆண்டு இன்பர்மேஷன் டெக்னாலஜி.

“இந்த கைப்புள்ள காமெடியெல்லாம் எங்க கிட்ட வேணாம்டியேய். உன்ன பவுண்டரி லாப்புல இருட்டடி போட்டது எங்களுக்கு தெரியாதுன்னு நெனப்பா?? சும்மா தண்ணிய போட்டுபுட்டு சவடால் பேச்சு உனக்கு? உன் அலப்பறைக்கு அளவே இல்லாம போய்கிருக்கு…!”

வாழபழத்துல ஊசி ஏத்துறது போல, நோகாம ஒக்காந்துகிட்டு கால வாரி விடுறது இவரு ஸ்பெஷாலிட்டி. எல்லாரும் சரக்கடிக்கும் போது பொதுவுக்கு நானும்னு ஒரு பீர் பாட்டில கையில புடிப்பான். எல்லாரும் மயங்குன நேரம் பாத்து அவங்க க்ளாஸ்ல பீர ஊதிட்டு சத்தமில்லாம சைடு டிஷ் காலி பண்ணும் கனவான் நம்ம மங்கினி.

இவங்களோட கவுளி கோபி, நட்டுவாக்களி நடராசு, ராக்கோழி ராசுகுட்டி மற்றும் பலர். ஒரே ஜமால் தான் போங்க இவங்க எல்லாம் ஒண்ணா சேந்தா.

இவங்களோட ஜாயின்ட் பாயிண்ட் அரட்டை களம் எல்லாமே இந்த டாஸ்மாக்கும், அதுக்கு பக்கத்துலையே இருக்க ஸ்டார் ஓட்டலும் தான். ஸ்டார் ஓட்டல்னு சொன்னதும் எதோ ஐ கிளாஸ் ஓட்டல்னு நெனசுகிட்டிங்கன்னா அதுக்கு நான் பொறுப்பில்ல.  கையேந்தி பவனுக்கு கொஞ்சம் மேல, ஆனா வசந்தபவனுக்கு ஒரு ரெண்டு மூணு படி கீழ. பரோட்டா மாஸ்டருக்கும் அவர் வீட்டு சப்ளயர்களுக்கு மட்டுமே கூரை இருக்கும் ஒரு திறந்தவெளி நவநாகரீக ஓட்டல். கொஞ்சம் தெளிவா இருக்கும் போது இங்க வந்து சாப்டாலும் நீங்க அதோ கதி தான். மப்பு மகான்கள் மட்டுமே சஞ்சரிக்கும் மகிமை வாய்ந்த ஓட்டல். அருகிலிருக்கும் டாஸ்மாக் புண்ணியத்தில் ஸ்டார் ஜெகஜோதியா ஷயின் ஆகிகிட்டிருந்துது.

ஆறாவது ரவுண்ட்..
மங்கினி, “மாமா நீ என்ன சொல்றே அந்த பொண்ணு உன்ன பாக்காம வேற எல்லார் கூடையும் கடல போடுதுன்னு சொல்றியா..இல்ல அந்த பொண்ண சந்தேகபட்ரியா?”
என்னத்த சந்தேகம் ம%$#, அவ ஆக்டிவிடிஈஸ் சரி இல்ல டா. ரெண்டுல ஒண்ணு. அவ்ளோதான்.
மங்கினி, “என்ன ரெண்டு..?”
திம்சு, “மாமா…அவ உனக்குதாண்டா..”
டேய் உனுக்கு ஏறிடிச்சி. சூ%#^& மூடிட்டு ஒக்காந்திரு..டேய்..எவண்டா என் ஆப் பாயில காலி பண்ணது?
சுதாரித்த மங்கினி , “ரெண்டுல ஒண்ணு என்ன மாமா?”
கரெட் டா..ஒண்ணு அவ என்ன…

சப்ளையர் “தம்பி..கிங் பிஷர் கூலிங் இல்ல, கல்யாணி தந்துரட்டுமா?”

மாம்ஸ், “இன்னாவான்?”

மங்கினி “தமிழ்ல தான சொன்னாபடி..”

“அவுரு சொன்னதே புரிஞ்சிட்சி..நீ இன்னாத்த சொல்றனே புரில..சொன்னாபுடி, இடுப்பு புடி இன்னிகினு..!”

“வெலங்குனாப்ல தான்..ஆமா மாமா..நீ பேசுறது கொங்கு தமிழ்..கல்வெட்ல செதிக்கிருவாய்ங்… நா, நீங்க இருக்கறத குடுங்கண்ணா குடிகார பக்கிகள் எதுனாலும் குடிப்பாணுவ..”

உவ்வ்வே…
மங்கினி ஆர்வமுடன், “மாமா நீ கேட்ட ஆப் பாயில்..பாத்தியில்ல நம்ம திம்சு பவர.”
டேய்..ஒரு க்வாட்டர் கட்டிங் உட்டதுக்கேவா? டேய்..எந்திர்றா. ஓ%$  மங்கினி..கவுளி..டேய்..உங்குளுக்கு ஊத்தி குடுத்தா மட்டும் பத்தாதா டா? எந்திர்றா தடிமாடு.
மவனே திம்சு தடியா..உட்டனா தாராந்துடுவே, கொய்யால..டேய் தூக்குடா இவன”

மங்கினி குசும்புடன், “மாம்ஸ், இவன இங்கனகுல்லையே அடகு வெச்சிட்டு போய்டுவோம்..நாள பின்ன வந்தா சப்ளையர் டிப்சு குடுக்க வேணாம், என்ன சொல்ற?”

(குசும்புகள் தொடரும்..)

Advertisement

3 Comments

Filed under சிறுகதை, தமிழ், Fun

3 Responses to மாம்ஸ், மங்கினி, திம்ஸ் மற்றும் பலர்…

  1. saami

    dey mama

    nalla thaan irukku, aana parthu yezuthu, un first year leelai-kalelaam ambalam aagidapoguthu..
    athu seri, yaar antha ponnu? unakku activities pidikaama pona ponnu? pasanga guess panrathuku munnadi story line la iruka charactergalil kulapam seithuvidu… apeet-aagikko!!!!

  2. vvn

    ba…. super a keethu ba…….. intha maathiri nee eluthi naan paarthathe illa ba………. (nandri : paruthiveeran)

  3. Pingback: குட்டி குட்டி ப்ளாக்கு..ஏ சுட்டி சுட்டி ப்ளாக்கு…!! « “வெப்” பேச்சுக்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s