கடைசி பதிவு எழுதி பல வருசமாச்சி..
கழுதை தேஞ்சி கட்டெறும்பு ஆச்சி..
ரசிகர்கள் தொல்ல தாங்கமுடியாம போச்சி..
ஏ புள்ள காமாச்சி..
கூழோ கஞ்சியோ, சட்டியோட காய்ச்சி..
மாமனுக்கு ஊத்துனா என்ன கொறஞ்சா போச்சி..
ஏய் டண்ட நக்கா..ஏ டனக்கு நக்கா…
டிக்கான் டிக்கான் டிஸ்..!!
ஒண்ணு கீழ ஒண்ணா போட்டு..எதுக மோன கலந்து எழுது..
இது எங்கள் தானைய தலைவன், எட்டுக்கட்டை ஏகாதிபதி விஜய T R அவர்களின் தொண்டன், என் தாரக மந்திரம். இனி ஒவ்வொரு பதிவுலயும் கேக்க வெப்பேன் இது யாரு இது யாருன்னு. அப்பறம் சொல்லாமலே தெரியும் அது விஜய டி.ஆர் ன்னு
இதனால சகலருக்கும் சொல்லிக்கறது என்னான்னா..இனிமே நேரம் கெடைக்கும் போதெல்லாம், ஒரு மினி பீர்..சாரி..ஒரு மினி பதிவு எழுதலாம்னு முடிவு பண்ணிருக்கேன். பெருசா எழுதினா இவன் பெருசுன்னு எல்லாம் நெனசிடறாங்க. அதான் நானும் யூத்துன்னு காமிக்க எழுதறேன். குட்டியா எழுதினாலும் ரொம்ப சுட்டியா எழுதனும்னு எங்க மங்கினி மச்சான் சொல்லி இருக்காரு. அதால கொஞ்சம் நிறம் சுவை திடம் எல்லாம் கொறச்சலா இருந்தாலும், அஜீஸ் பண்ணிக்கொங்கோவ்…!!
நண்பா… பிளாக் உலகத்திற்கு திரும்பியது மிக்க மகிழ்ச்சி.. கலக்குங்க….