ஓ பேபி..ஒ பேபி..செந்தேனில் ஒஸ்சாபி ..!!
ஓ பேபி..ஒ பேபி..மேகத்தில் பூத்த குலாபி..!!
அது என்னமோ தெரில என்ன மாயமோ தெரில..ஒரு ரெண்டு மூணு நாளாவே இந்த வரிகள நறைய முணுமுணுக்கறேன்.
பல நேரங்களில் மொள்ளமா..சில சமயம் சத்தமா.அட பாடுனா என்ன குத்தமா?? (வீர வசன வேங்கை விஜய டி.ஆர்)
என்ன பாட்டுன்னு முழி க்கரவங்களுக்கு சன் பிக்சர்ஸ் சார்பில் பொதுமாத்து போடப்படும். வீடு தோறும் சன்..டண்டணக்கா டன்..!!
பாடல்: காதல் அணுக்கள்…
படம்: எந்திரன்
பாடியவர்கள்: விஜய் பிரகாஷ், ஸ்ரேயா கோஷல், யோகேஷ், மங்கினி, மாம்ஸ், என் பக்கத்துக்கு வீட்டு நண்பர், கவுளி கோபி..(அட நாங்களும் பாடுனோமப்பா …!!)
வரிகள்: டைமண்டு-பேர்ல் (வைரமுத்துங்க்னா..!!)
காலேஜ்ல இருக்கும் போதுலேருந்தே இந்த பழக்கம் எனக்கு உண்டு. எதாச்சும் பிரபலமான பாட்டுல நல்ல வரிய விட, இந்த மாரி பில்பான்ஸ் லைன் எல்லாம் பச்சக்குன்னு ஒட்டிக்கும். ரெண்டு மூணு தடவ அத நான் பாடினா கேக்க நல்ல இருக்கும். பல சமயம் ரூம் மேட்டுக்ள அலறி அடிச்சி ஓட வெக்கும். இந்த அலறிய குருப்புக்கள் என்ன அழ வெக்க ஒரு புது திட்டத்த தீட்டினாங்க. அதுதான்..தன னா னா ணா ந ந னா.. (அது என்னனு ஒரு பதிவ போடுவோம்ல..)
ஏ ஆர் ரகுமான் அவரோட பாட்டுகள்ள இந்த மாறி அஜால் குஜால் லைன் நறைய பிரபலம். தேவா அவர்கள் இசையில் அஜக்கு இன்னா அஜக்கு தான் குமுக்கு இன்னா குமுக்கு தான் பட்டிதொட்டி எங்கும் பிரபலமாச்சி. ஹம்மா ஹம்மா முணுமுணுக்காத ஆட்களே இருந்ததில்ல. அண்ணன் ஹாரிஸ் அவர்களும் தன் பங்குக்கு ஒ மாகசீயக்கள இன்னும் இட்டுக்கட்டி படிச்சாப்ல. தமிழே தமன்னா இடுபாட்டம் தில்லாலங்கடி ஆடும்போது, ஸ்பானிஷ், ஈரானி, ரஷ்சிய மொழிகள்ல இருந்து வார்த்தைகள கலந்து உட்டாரு நம்ம பாரிஸ் கார்னர் ஹாரிஸ்சு. உடுவோமா நாங்க…உ ஊ..ஒ ஓ..ஓலா கோமோ ஈஸ்டாஸ்.. (ஜூன் போனா பாடல்..) பாட்டு எழுதறவங்கள மட்டும் கொற சொல்ல முடியாது..பல சமயம் கேப் அடைக்க இந்த மாதிரி வார்த்தைகள் தேவைப்படலாம்.
நானும் குத்த வெச்சி யோசிச்சி பாத்தேன்..இந்த மாதிரி லைன் எல்லாம் பழைய பாடல்கள்ள ரொம்ப கம்மின்னு நெனைக்கறேன். அப்பிடியே இருந்தாலும் அது எல்லாம்
அடுக்குத் தொடரா இருந்திருக்கும்.(உதாரணம்: ஜிகு ஜிகு வென நானே..ஜகத்தை மயக்கிடுவேனே..கல கல கலவென ஜோரா…) இசைஞானி அவரோட பாடல்கள்ளையும் இந்த வகை ரொம்ப கம்மி. உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்களேன்..!